விசுவாசிப்பீர் தேவ
visuvaasippeer deva
விசுவாசிப்பீர் தேவ ஜனமே - இன்றே தேவனின் மகிமையை காண்போம்
ஆதியும் அந்தமும் இயேசுவின் நாமமே ஆசீர்வதித்திடும் அற்புத நாமமே - விசு
1. ஆள்கின்ற பாவத்தின் கறை திரைகளும் காணாமல் மாய்ந்திடுமோ இயேசுவின் இரத்தத்தால் வானிலும் பூவிலும் உயர்ந்த நாமம் மாவல்ல இரட்சிப்பை நல்கிடும் - விசு
2. மாறாது நோய்களும் தீரா வியாதியும் மாறிடும் இஷணமே கல்வாரி ஜீவனால் மரித்தும் ஜீவிக்கும் இயேசுவின் நாமமே மாண்டாரை உயிர்ப்பிக்கும் நிச்சயமே - விசு
3. சீறும் கடலையும் முற்றும் அமர்த்தியே தேற்றினார் சீஷரை ஜீவனின் வார்த்தையால் சர்வமும் ஜெயித்த வல்லவர் நாமமே மாற்றிடும் சோதனைகள் யாவையுமே - விசு
4. மண்ணோரை விண்ணோராய் மாற்றிட இயேசுவே மண்ணிலே மரித்தும் ஜீவனாய் உயிர்த்தார் சாவினை ஆவியால் வென்றதோர் நாமமே சாவாமை அளித்திடும் அற்புதமாய் - விசு
5. தேகத்தை கிழித்தும் இரத்தத்தைச் சித்தியும் திறந்தார் புதியதோர் ஜீவனின் மார்க்கமே மகா பரிசுத்தர் மாறாத நாமமே சாலேமில் சீயோனிலே சேர்த்திடும் - விசு