விசுவாசி அவனென்றும்
visuvaasi avanendrum
விசுவாசி அவனென்றும் பதறான் - 2 அவன் நங்கூரம் இயேசுவில் உண்டு ஆபத்தை கண்டென்றும் அஞ்சான் அசையாத விசுவாசம் கொள்வான் இசையோடு இயேசுவை புகழ்வான்
1. ஆபிரகாம் விசுவாசித்தான் ஈசாக்கை பலியாக படைத்திட்டானே - 2 மரித்தாலும் விசுவாசி பிழைத்திடுவான் மரியாமலும் என்றும் வாழ்ந்திடுவான் -2
2. விசுவாசித்தால் மகிமையை காண்பாய் வெற்றியுடன் என்றும் வாழ்ந்திடலாம் பாவம் நம்மை மேற்கொள்ளாமல் பரன் ஈந்து ஆவியால் காத்திடுவார்
3. போராட்டம் இன்று வந்திட்டாலும் இயேசுவில் நின்று நிலைத்திடுவேன் விசுவாசத்தால் நான் பிழைத்திடுவேன் நம்பும் என் தேவனை நான் அறிவேன்!