விசுவாசத்தாலே நாமும்
visuvaasathaalae naamum
விசுவாசத்தாலே நாமும் பிழைப்போம் பசுமை செழிப்புடன் வாழ்வோம் ஏசு தேவன் நம்பினோரே
விசுவாசம் எம்மில் கடுகளவிருந்தால் வீழ்த்திடுவோம் மலையைக் கடலிலே உலகை ஜெயித்திடுமே விசுவாசம் உத்தம் இதயத்தில் தங்கும்
1. கர்த்தரை கண்டு விசுவாசிப்பதிலும் காணாமல் நம்பினால் பாக்கியமே தரிசித்தல்ல விசுவாசத்தாலே தங்கி நம்மில் வசிக்கும் கர்த்தருக்குள் பரிசுத்தாவியின் மகிழ்ந்து நாமும் பூரண மகிமை அடைவோம்
2. வீரர்கள் நின்றிடுவோமே விசுவாச சோதனை நேர்ந்திடினும் பொன்னைப் போல் நெருப்பில் புடமிட்டபோதும் பொன்னாக நம் விசுவாசம் விளங்க புகழ்ச்சி கனம் மகிமை கிடைக்குமே பரமன் வெளிப்படும் நாளில்
3. ஆபிரகாமின் விசுவாசம் மார்க்கம் அந்த அடிச்சுவட்டில் நடப்போர் வாழ்வினில் நீதி கிறிஸ்துவின் மூலம் வாக்குத்தத்த ஆசீர்வாத நன்மைகள் ஜெயத்தின் மேல் ஜெயங்கொண்டு பக்தர்கள் சந்ததம் சுதந்தரிப்போம்
4. தேவ குமாரன் வந்திடும் நாளில் தூய விசுவாசத்தோடு பறப்போம் மூலைக்கல் இயேசு திட அஸ்திபாரம் மாளிகையாய் அவர் மேல் இணைந்து நாம் பரம அழைப்பின் சீயோனில் பிதாவின் முகம் கண்டு வாழ்வோம்