விசுவாசம் தாரும் தேவா
visuvaasam thaarum devaa
விசுவாசம் தாரும் தேவா-என் விசுவாச குறை நீக்கிடும் அபாத்திரன் நான் கேட்டிடும் யாவும் பரனே நீர் அருள் செய்யும்
1. நான்கு நாள் ஆயிற்றே நாறும் அன்றோ தாமதம் ஏன் வந்தே தவறியதே விசுவாசித்தால் தேவ மகிமையை காண்பாய் லாசருவே நீயும் எழும்பி வா
2. பன்னிரண்டு வருடம் பெரும்பாடினால் பாடுபட்ட ஸ்திரீ உன் வஸ்திரம் தொட்டால் ஸ்திரீயே உன் விசுவாசம் பெரியது என்றார் பெரும்பாடு நீங்கியே சுகமடைந்தாள்
3. பிள்ளையார் அப்பம் கேட்டபோது மேஜை துணிக்கையும் கிடைத்த தன்றே ஸ்திரீயே உன் விசுவாசம் பெரியது என் உன் விருப்பம் ஆகட்டும் என்று சொல்
4. திமிர்வாதக்காரனை நோக்கி நீர் மன்னித்தேன் உன் பாவம் போ என்றார் சொஸ்தமடைந்தவன் எழுந்து நடந்தான் தேவனை மகிமைப் படுத்தினானே
5. இயேசுவின் தழும்பினால் குணமாகும் இயேசுவின் இரத்தம் நம் ஒளஷதம் இயேசுவை நம்பினோர் வெட்கமடையார் இயேசுதாம் நமக்கு பரிகாரியே