விசுவாச வீரர் விழித்தெழும்பு
visuvaasa veerar vizhithezhumbu
விசுவாச வீரர் விழித்தெழும்பு வீரா வீரன் இயேசுக்காய் போர் புரியவே - ஏகமாய்
1. விசுவாசத்தால் உலகையே வெல்வீர் விசுவாச கேடகம் எடுத்த வேதாள வேந்தனே ஜெயித்தார் சிங்காசனத்திலே வீற்றிருந்து இயேசு ஆட்சி செய்வதால் - விசு
2. விசுவாசத்தால் எரிகோ வீழ்ந்ததே விசுவாச வீரன் துதி தொனியினால் விசுவாசத்தால் கடல்கள் பாதையாக மாறிப் போயிற்று வன் மலையினின்றும் வெள்ளம் பாய்ந்ததே - விசு
3. விசுவாசத்தால் நோய் பேய் அகன்றது விசுவாசத்தாலே நீயும் பெறவே விசுவாசத்தாலே இளைப்பாறுதல் நீ பெற்று மகிழ விரைந் தேசு உன்னைத் தேடி வந்தாரே - விசு
4. பாருருவாகும் முன் விசுவாசத்தின் மா பெருங் கிரியை நித்ய வார்த்தையால் முடித்த வல்ல தேவனின் சொல்லொண்ணா மா மகிமை இன்று விசுவாசித்தால் நீர் காண்பீர் - விசு
5. விசுவாசத்தின் ஆதியும் அந்தமும் இயேசுவை நோக்கி நேராக ஓடியே விசுவாசித்தால் உலகை இயேசுவுக்கு சொந்தமாக்குவோம் வாக்குரைத்தவர் நம்மண்டை நிற்கிறார் - விசு