விசுவாச வீடு கட்டுவோம்
visuvaasa veedu kattuvom
விசுவாச வீடு கட்டுவோம் - நாங்களும் விசுவாச வீடு கட்டுவோம்
இயேசுவின் பிள்ளைகள் ஆகியே - என்றும் அசையாத அஸ்திபாரத்தில்
மணலோரம் கட்டுகின்ற வீடுகள் - வெள்ளம் வரும்போது சாய்ந்துபோக நேருமே (2) கன்மலைமீது கட்டுகின்ற வீடுகள் (1) காற்றடித்தாலும் அசையாது நிற்குமே
புத்தியுள்ள மனிதர்; கட்டும் வீடுகள் கன்மலைமீது கட்டும் வீடு ஆகுமே (2) மதியில்லா மனிதர்; கட்டும் வீடுகள் (1) மணலோரம் கட்டும் வீடு ஆகுமே
இயேசு சொன்ன ஜீவனுள்ள வார்;த்தைகள் கன்மலைமீது கட்டும் வீடு ஆகுமே (2) தேவஞானம் தேசமெங்கும் பெருகவே (1) இயேசு சொன்ன வார்த்தைகளே போதுமே