விண்ணும் மண்ணும் மகிழும்
vinnum mannum magizhum
விண்ணும் மண்ணும் மகிழும் பொன்னான நாள் இதுவே பூவுலகு எங்கும் பூபாளம் கேட்கின்றதே! பாலகன் பிறந்தார் மாடடைக்குடிலில் மன்னவன் மலர்ந்தார் மாமரியின் மடியில் - 2 உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உண்டாகுதே உலகினில் அவருக்கு உகந்தோருக்கு (இன்று) அமைதி உண்டாகுதே Happy Happy Happy Christmas Merry Merry Merry Christmas} 2
ஊரெங்கும் பேரொளி அவர் மாட்சியே! பாரெங்கும் இனிஎன்றும் அவர் ஆட்சியே..... விடிவெள்ளி இவர்தானே அருள்வாழ்விலே இருளில்லை ஒருபோதும் நம்வாழ்விலே (இனி) - 2 மறைபொருளாகிடும் விண்மலரே! மாதவமே... என் மாபரனே... 2 பிறந்து வ... பிறந்து வா.... என் உள்ளக்குடிலில் பிறந்து வா.... Merry Merry Merry Christmas} 2 Happy Happy Happy Christmas
திசையெங்கும் அவரது திருக் காட்சியே! இனியெங்கும் நாம் என்றும் அவர் சாட்சியே... உயிரூட்டும் அருளாளன் இவர்தானன்றோ வலுவூட்டும் புதுவாழ்வு தருவாரன்றோ! - (என்றும்) - 2 திருஅவை வளம் தரும் அருள்நதியே! திருவருளே என் வானமுதே... பிறந்து வா.... பிறந்து வா.... என் உள்ளக்குடிலில் பிறந்து வா.... Merry Merry Merry Christmas) 2 Happy Happy Happy Christmas