விண்ணின் தெய்வம் மண்ணில்
vinnin theyvam mannil
விண்ணின் தெய்வம் மண்ணில் உதித்து நமக்காய் பிறந்தாரே ஆராரோ பாடிடுவோம் ஆடி பாடி மகிழ்ந்திடுவோம்
பொட்டல் நிலமும் பாலை வெளியும் களிகூறும் நாள் இதுதானோ இதுதானோ நன்நாள் இதுதானோ காரிருள் நீங்கும் பேரொளி கடரும் மகிழும் நாள் இதுதானோ இதுதானோ திருநாள் இதுதானோ
இல்லை இல்லை இல்லை - இனி வருத்தம் நமக்கு இல்லை தொல்லை தொல்லை தொல்லை - இனி வாழ்வில் ஏதும் இல்லை - அந்த விண்ணின் தெய்வம் மண்ணில் உதித்து நமக்காய் பிறந்தாரே ஆராரோ பாடிடுவோம் ஆடிபாடி மகிழ்ந்திடுவோம்