விண்ணின் மைந்தனே மண்ணுலகில்
vinnin maindhanae mannulagil
விண்ணின் மைந்தனே மண்ணுலகில் எனக்காக பிறந்தீரே தேவரூபமாய் அன்பின் பிள்ளையாய் எனக்காக பிறந்தீரே -2 கொண்டாடுவேன் உம் வருகையை துதித்திடுவேன் உயிர் உள்ளவரை -(2)
1.மகிமையின் தேவன் பிறந்தார் - நான் மகிமையின் சாயல் பெற்றிட உன்னதர் இயேசு பிறந்தார் - நான் உயிரோடு எழுந்திட - (2) கொண்டாடுவேன் உம் வருகையை துதித்திடுவேன் உயிர் உள்ளவரை -(2)
2.வானத்தில் தோன்றிய நட்சத்திரம் இயேசுவை காட்டிக் கொடுத்ததே மேய்ப்பர்கள் சாஸ்திரிகள் பணிந்திட இயேசு பிறந்தாரே - (2) கொண்டாடுவேன் உம் வருகையை துதித்திடுவேன் உயிர் உள்ளவரை -(2)