விண்ணின் தேவன் மண்ணில்
vinnin devan mannil
விண்ணின் தேவன் மண்ணில் பிறந்தார் கன்னியின் கருவில் உதித்தார் -2 உனக்காக.. எனக்காக.. உலகில் உள்ள எல்லாருக்கும் இயேசு பாலன் பூமியில் பிறந்தார் -2
1.தீர்க்கதரிசிகள் அறிவித்தவர் இவரே ஆதியும் அந்தமும் ஆனவர் -2 தன் வார்த்தையால் உலகை உண்டாக்கியவர் தன் மகிமையை வானில் காண செய்தவர் -2
2.மத்தியஸ்தர் நம் பதிலாளி இவரே பிரதான ஆசாரியர் ஆனவர் -2 பாவி என்று உலகம் உன்னை வெறுத்ததால் பாவம் நீக்கி இரட்சிக்க பிறந்துவிட்டார் -2
3.ஏற்றத்தாழ்வை நீக்கியவர் இவரே நீதியும் நியாயமும் ஆனவர் -2 துணையாய் யாரும் இல்லையென்றால் உன்னோடு இருக்கவே இம்மானுவேல் பிற ந்துவிட்டார் -2