விண்ணப்பம் செய்தேன்
vinnappam seydhen
விண்ணப்பம் செய்தேன் ஐயா -2 உம் சித்தம் செய்ய உம்மோடு வாழ விண்ணப்பம் செய்தேன் ஐயா -2
அல்லேலூயா -8
கலங்கி தவித்து நின்றேன் கைதூக்க யாருமில்லை -2 அப்பா பிதாவே என்றே அழைத்தேன் ஆறுதல் அளித்தீரையா -2
மலைகள் விலகினாலும் பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும் -2 என் கிருபை உன்னைவிட்டு விலகாமல் இருக்கும் என்றீர் -2
வீட்டாரும் தள்ளினார்கள் ஊராரும் தள்ளினார்கள் -2 ஆனாலும் நீரோ முன்பாக நின்று என்னை சேர்த்து கொண்டீர் ஐயா -2