விண்ணக ராஜா மண்ணுலகம் வந்தீரே
vinnaga raajaa mannulagam vandheerae
விண்ணக ராஜா மண்ணுலகம் வந்தீரே - 2 மானிடனாய் மனுக்கோலம் எடுத்தீரே ஆரிரரோ ஆரிர ராராரோ அல்லேலூயா - 2
1. காரிருள் நேரத்திலே விடிவெள்ளி தோன்றியதே - 2 மேய்ப்பர் விரைந்து பாலகனை பணிந்தனரே - 2
2. மாட்டடைக் கொட்டினிலே தேவமைந்தனாய் வந்தாரே - 2 மேன்மை வெறுத்து தாழ்மையினைத் தரித்தாரே - 2
3. வான்புவி சிருஷ்டிகளும் உம்மண்டை வந்தனரே - 2 பாலனாக இவ்வுலகம் வந்தீரே - 2
அல்லேலூயா அல்லேலூயா பாலன் பிறந்தாரே அல்லேலூயா அல்லேலூயா ராஜன் பிறந்தாரே