விந்தையே மண்ணிலே
vindhaiyae mannilae
1. விந்தையே மண்ணிலே என்னவொரு அன்பிதே விண் தூதர் வானில் பாடுகின்றார் ஏனோ இம்மானுவேல் மன்னுருவானாரே மானவரை தேடி வந்ததாலோ
ஆச்சரியமே இவர் நாடியே நம்மையே ஆநிரை குடிலை வந்தடைந்தார் அற்புதம் இந்த தாழ்மையின் கோலம் தற்பரன் சுதன் இயேசு இரட்சகரே
2. ஏகினார் பெத்தலை என்னும் நாமத்தில் தாகத்தை தீர்த்திடும் ஜீவநதியாய் கே தமில்லாதோர் ஜீவியமீந்திட ஏக்சுதன் மகவானார் இதோ - ஆச்ச
3. வியாதிக்கோர் ஒளஷதம் சாவிலும் ஜீவனும் வியா குலத்தில் உற்ற தோழன் அவரே யெல்ஷதாவாம் இவர் கண்ணுறங்கா தெம்மை ஏற்று தன் மடியில் சுமப்பவர் - ஆச்ச
4. பாலகனாய் வந்தோர் ராஜன் வருவார் பாவனை சேர்க்க தம் முடனென்றும் பாடுகள் நிந்தைகள் தம் பங்காய் கொண்டோர்க்கே பாலனமீந்திட வந்திடுவார் - ஆச்ச
5. வாழ்த்துவோம் இத்தினம் வானவ சேனை தாழ்த்தியே சேவிப்போம் தம் மலர் பாதம் ஏழ்மையை வந்தாரே சீயோனின் ராஜானே புகழ்ந்து இவ்வன்பை என் சொல்லுவோம் - ஆச்ச