விண் ஏகுமுன் நல்வார்த்தையை
vin egumun nalvaarthaiyai
1. விண் ஏகுமுன் நல்வார்த்தையை நம் மீட்பர் மொழிந்தார் மா நித்ய ஆறதலை வாக்களித்தார்.
2. அவ்வாறு வல்ல ஆவியே சகாயராய் வந்தார் மெய்ப் பக்தர் நைந்த நெஞ்சிலே சஞ்சரிப்பார்.
3. ஆகாத சிந்தை தோன்றினால் மேலிடவே ஒட்டார் வீண் பயமும் மென்சொல்லினால் அகற்றுவார்.
4. நற்குணம் செய்கை விருப்பம் மெய்ப்பக்தி யாவுமே தேவாவியாலே மாத்ரம் உண்டாகுமே.
5. மா தூய நேச ஆவியே தாசர்க் கிரங்குமே சுத்தாங்கம் தந்து நெஞ்சிலே வந்தாளுமே.