விளங்குமென் விசுவாசம்
vilangumen visuvaasam
விளங்குமென் விசுவாசம் மிளிறும் சொன்னது போல் ஒளிர் மிகு பரிசோதனையில் - நின்று
1. அக்கினியோடு நடந்திடும் வேளை இக்கட்டில் அழியா தென் விசுவாசமே தக்க நாள் கிருபைகள் - மிக்க அளித்தென்னை எக்கணம் ஜெயமாய் ஜொலிக்க செய்வாரே (2) - விள
2. கால் தடுமாறி சறுக்கிடும் நேரம் மெல்ல கை தாங்கியவர் நடத்தினார் நல்லதோர் துணையென இயேசுவே எந்தனையே வல்லதாம் புயத்தால் நிறுத்திடுவாரே - விள
3. சாவின் நிழலில் நடப்பினும் நானே ஆவியே நடத்துவார் தீபமாய் ஜீவிக்க அனுதினமும் வல்லதோர் பெலன்தனை மேவியே அருள்வார் அபிஷேகத்தாலே - விள
4. வாண்டலம் மீதில் விண்ணுடுவானோர் மண்டலம் வீழ்ந்திடும் வேளையிது மாண்டிடா அளித்தென்றும் தம் திரு வசனங்கள் ஆண்டென்னை நடத்தி ஜெயம் தருவாரே - விள
5, மாறுமோ சீயோன் பூவதிர்ந்தாலும் மாசுறுமோ சபை சோதனையில் மாவல்ல அரணுண்டே காத்திட விசுவாசம் மாவரும் ஜீவியம் இயேசுவில் அடைந்தேன் - விள