விடுதலையடைத்தவன் நான்
vidudhalaiyadaithavan naan
விடுதலையடைத்தவன் நான் கிறிஸ்து இயேசுவின் இரத்தத்தினால் பழையவையெல்லாம் ஒழிந்துபோனதே புதிதான மனிதனானேன்
கிருபை தேவ கிருபை இலவசமாய் பெற்றுக்கொண்ட கிருபை கிருபை தேவ கிருபை இயேசு எனக்கு தந்த கிருபை
1. நீதிமானாக மாற்றிவிட்டாரே நித்திய வாழ்வுக்கு வழியானரே நிரந்தர விடுதலை எனக்கு தந்தாரே நித்தியமாய் அவரோடு வாழுவேன்- கிருபை
2. தூய ஆவியால் நிரப்பிவிட்டாரே சீரான பாதையிலே நடத்துகிறாரே வறண்ட என் வாழ்க்கையெல்லாம் செழிப்பானதே வாழ்வெல்லாம் அவர் புகழ் பாடுவேன்- கிருபை
3. உயிரோடு வாழும் நாட்களெல்லாம் ஒருபோதும் என்னை கைவிடமாட்டார் மரண பரியந்தம் நடத்திடுவார் மகிமையாய் அவரோடு வாழுவேன்- கிருபை