விடுதலை ராகங்கள் விடியலின் கீதங்கள்
vidudhalai raagangal vidiyalin geedhangal
விடுதலை ராகங்கள் விடியலின் கீதங்கள் முழங்கிட வாருங்களே புது உலகமைத்திட புதுவழி படைத்திட அன்புடன் வாருங்களே
வாருங்கள் வாருங்கள் ஆலயம் வாருங்கள் அனைவரும் வாருங்களே - 2
அன்புக்காகவும் அமைதிக்காகவும் இயேசு மனுவானார் உண்மைக்காகவும் நீதிக்காகவும் அவரே பலியானார் ( 2 ) ஒன்று கூடுவோம் உணர்ந்து வாழுவோம் - 2 சுயநலம் நீக்கி பிறர்நலம் காத்து அன்பினில் நாம் இணைவோம் - வாருங்கள் , 2
ஏழை எளியவர் வாழும் இடங்களே இறைவன் வீடாகும் வறுமைப் பிடியிலே அலறும் குடில்களே இறைவனின் மொழியாகும் ( 2 ) பகிர்ந்து வாழுவோம் பசியை நீக்குவோம் - 2 இறைவனின் அரசின் இனிமையைக் காண இன்றே முயன்றிடுவோம்