வெண்கல கதவுகளே
vengala kadhavugalae
வெண்கல கதவுகளே திறந்து வழி விடுங்கள் இருப்பு தாழ்ப்பாள்களே முறிந்து ஓடுங்கள் இராஜா வந்துவிட்டார் சொன்ன வாக்கை நிறைவேற்ற
புதையல்களை பொக்கிஷங்களை எனக்கு (உனக்கு ) தந்திடுவார் அது அந்தகாரமானாலும் ஒளிப்பிடத்திலிருந்தாலும்
1. நண்பருக்காய் வேண்டும்போது சிறையிருப்பு மாறியது ஒன்றுகூடி துதிக்கும் போது ஜெயிலும் கூட ஆடியது
இரட்டிப்பான பங்கு நிச்சயமாய் உண்டு வெறுமையெல்லாம் ஓடும் உன் நன்மைகளைக் கண்டு
2. வெட்கத்துக்கு பதிலாக இரட்டிப்பான பலன் வருமே எலிசா போல விழித்திருந்தால் இரட்டிப்பான வரம் வருமே
ஆவியின் கனிகள் வரங்கள் எல்லாம் உனக்குள்ளே வெளிப்படும் நாட்கள் வந்ததே
3. அன்னாளை எல்க்கானா நேசித்ததால் இரண்டு பங்கு அள்ளித் தந்தான் இயேசு என்னையும் நேசிப்பதால் நல்ல பங்கு அள்ளித் தருவார்
புறம் பேசும் நாவு அறுக்கப்பட்டு போகும் எதிரான கூட்டம் இல்லாமல் போகும்