வெண்கல கதவுகள உடைக்க வல்லவரே
vengala kadhavugala udaikka vallavarae
வெண்கல கதவுகள உடைக்க வல்லவரே இரும்பு தாழ்ப்பாள்கள முறிக்க வல்லவரே
எஷூரரே என் இயேசுவே உம் வல்லமை என்றும் குறைவதில்லையே
யேகோவா நிசியே உம்மை என்றும் ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் ... ஆராதிப்பேன் ...ஆராதிப்பேன் என் இயேசுவையே
1. சத்துரு சேனை தொடர்ந்து வந்தாலும் தனித்து நின்று ஜெயிப்பவர் நீரே யுத்தங்கள் எனக்காய் செய்பவர் நீரே யூதாவின் அதிபதியானவர் நீரே
2. எரிகோ கோட்டையும் எதிர்த்து வந்தாலும் துதியின் சத்தத்தால் உடைப்பவர் நீரே பலமாய் இறங்கி வருபவர் நீரே பாதாளம் அதிர செய்பவர் நீரே