வேண்டுதல் கேளுமென்
vendudhal kelumen
வேண்டுதல் கேளுமென் பரனே ஓ - ஓ அடியேன் உம்மிலே மகிழ்ந்திடவே
1. உம்மையல்லாதே வேறாரும் இல்லையே பூதல மீதினிலே கூவிடுதே என் உள்ளமே உன்னத இரங்கிடுமே - வேண்
2. மாறிடேனே ஓர் நாளில் மென்றீர் மாறுவேன் நான் இதிலே கூறிடும் நின் வழி எனக்கே வேறிடமெனக் கில்லையே - வேண்
3. இந்நாள் வரையும் என்னுடனிருந்தீர் ஆதரவே அளித்தீர் அற்புதனே என்னைத் தள்ளி டீரே தவித்திடும் வேளையே - வேண்
4. நின் ஐனத்தாரின் கூக்குரலாலே உன்னதா! மனமிரங்கி அன்னையைப் போல் அரவணைத்தீர் இன்றைக்கென்னைக் கேட்பீரே- வேண்
5. மகத்துவம்! நீர் மா வருங் குருவே! மகிமையின் அதிபதியே! மகிலம் ஆள்பவனே! மறவீரா எனை அரசே! - வேண்