வெள்ளிச் சுரங்களின் அலைகளிலே
vellis surangalin alaigalilae
வெள்ளிச் சுரங்களின் அலைகளிலே துள்ளி வருகின்ற சந்தங்களே உள்ளங்கனிந்த என் நன்றியினைக் சொல்லிப்பாடுங்களே ( 2 ) எந்தன் தேவனுக்கே - 2
கருவினில் என்னை அறிந்தவன் கண்மணி போல வளர்த்தவன் அறுவடை மிகுந்த பணியிலே அடியேன் என்னை வளர்த்தவன் அருகில் இருந்து ஆற்றல் பொழிந்து நிறையானந்தம் தருபவன் அந்த நல்ல தேவனுக்கே என் நன்றியைக் கூறுங்களே
கொடுப்பதில் இன்பம் வைத்தவன் தன்னையே உண்ணக் கொடுத்தவன் படிப்பினைகள் சொல்லியவன் சொன்னபடியே வாழ்ந்தவன் இடுக்கண்ணுற்று வீழும் போது எனக்காய் உயிர்கொடுத்தவன் - அந்த