வெளிச்சமாகி இரவு பகலை
velicchamaagi iravu pagalai
1. வெளிச்சமாகி இரவு பகலை வெகுவாய் முதல் நாள் ஏற்படுத்தி ஆகாய விரிவை உண்டாக்கி அமைத்தார் இரண்டாம் நாளதிலே.
2. மூன்றாம் நாளில் ஜலம் பிரிய முளைத்தது தரையில் புல் பூண்டு செடி கொடி விருட்சக் கனிகளுடன் சிறப்பாயிருக்கச் செய்தனரே.
3. நாலாம் நாளில் வானமதில் நவமாய் உதிக்கும் சூரியனும் சந்திரன் கோடி நட்சத்திரம் சர்வ வல்லவர் சொல்லாலமைத்தார்.
4. ஐந்தாம் நாளில் நீர் வாழும் அனந்த ஜாதி மச்சங்களும் ஆகாயப் பறவையை உண்டாக்கி ஆகாயத்தில் பறக்க விட்டனரே.
5. ஆறாம் நாளில் ஊர்வனவும் அனந்த ஜாதி மிருகங்களும் அள்ளின மண்ணில் ஆதாமை அமைத்தார் ஊதி உயிர் கொடுத்தார்.
6. ஏழாம் நாளில் பூமியிலே எல்லாம் முடிந்து தீர்ந்ததென்று ஓய்ந்திருந்து ஆசீர்வதித்து உயர்வாய்ப் பரிசுத்தப் படுத்தினாரே.