வேலைக்காரன் கண்கள்
velaikkaaran kangal
வேலைக்காரன் கண்கள் தன் எஜமான் கரம் நோக்கும் தேவா எனக்காய் எல்லாம் செய்யும் உம் கரத்தை என்றும் நோக்குவேன்
நீதியின் வலது கரம் நீதிமானை என்றும் தாங்கிடுமே விழுகையில் வியாதியின் நேரங்களில் விழுகையில் வியாதியின் நேரங்களில் வழுவாது உம் கரம் தாங்கிடுமே
கடலும் ஆறும் தடையில்லை ஆண்டவர் கரம் என்னோடிருந்தால் தடைகளை அகற்றும் நீர் முன்னே சென்றால் தடைகளை அகற்றும் நீர் முன்னே சென்றால் ஜெய வீரனாய் நானும் உம் பின் வருவேன்
சத்துவமுள்ள உந்தன் கரம் நித்தம் காத்து வழி நடத்திடுமே உம் கரம் பற்றியே என்றுமே நான் உம் கரம் பற்றியே என்றுமே நான் பத்திரமாய் இப்பூவில் நடப்பேனே
ஆதி அந்தம் இல்லாதோரே ஆவி ஆத்மா தேகம் உம் சொந்தமே முதிர் வயதால் தள்ளாடும் நேரங்களில் முதிர் வயதால் தள்ளாடும் நேரங்களில் முற்று முடிய தாங்கும் தம் கரம் என்றும்.
பாதகரும் சுத்தமாவார் உம் இரத்தம் வசனம் கொண்டென்றுமே சத்துருக்களை பாதத்தின் கீழ் தாழ்த்தியே சத்துருக்களை பாதத்தின் கீழ் தாழ்த்தியே மாசற்றோனாய் நிறுத்தம் அன்பின் கரம்.
அக்கினி தழலும் தென்றலாகும் தேவா உம்மோடு நடக்கும் போது சீறும் புயலால் ஆடும் படகுமே சீறும் புயலால் ஆடும் படகுமே சீராக ஓடும் தேவா உம் வார்த்தையாலே.
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
F Dm C Gm Bb C C Gm Bb C C F F Am Bb Am Gm C F F Am Bb C Dm F Gm C Dm C Gm C F F Am Bb Am Gm C F F Am Bb C Dm F Gm C Dm C Gm C F F Am Bb Am Gm C F F Am Bb C Dm F Gm C Dm C Gm C F