வேகமாய் அதிவேகமாய்
vegamaay adhivegamaay
வேகமாய் அதிவேகமாய் ராஜா வருகின்றார் மேகத்திலே விண்மேகத்திலே சீக்கிரம் வருகின்றார் சேனையோடிதோ வருகின்றார்
வானத்திலே நடுவானத்திலே மன்னவர் வருகின்றார் சீக்கிரமாய் அதி சீக்கிரமாய் தூதரோடிதோ வருகின்றார் சேனையோடிதோ வருகின்றார்
ராஜா வருகின்றார் நியாயம் தீர்க்கவே வருகின்றார் சீக்கிரம் வருகின்றார் ஆயத்தமாகிடுவோம்(2)
1.உபத்திரவங்கள் உலகத்திலே கர்த்தர் கரம் பாதுகாத்திடுமே திடுக்கிடும் திகில்கள் பூமியிலே வேத வார்த்தைகள் தேற்றிடுமே(2) ராஜா வருகின்றார் ஆயத்தமாகிடுவோம்(2)
2.மின்னலைப் போல சடுதியிலே பெரும் வெளிச்சம் பளிச்சிடுமே இடி முழக்கம் போல் எக்காலங்கள் சத்தம் வானத்தில் தொனித்திடுமே ராஜா வருகின்றார் ஆயத்தமாகிடுவோம்