வீசும் ஒளியினிலே ஆ ஆ
veesum oliyinilae aa aa
வீசும் ஒளியினிலே ஆ ஆ தோன்றும் இயேசு நாதா கிருபை தாரும் என் நாதா
1. அல்லல்படும் உமது மக்கள் அணைக்க வருவீரே என் நாதா பரத்தில் சேர்ப்பீர் ஆ ஆ இதோ சீக்கிரம் மேக ரதத்தில் வருவேன் என்றவர் மகிழும் எம் புறாவே
2.தமக்கு உள்ள பொருட்கள் அனைத்தும் இழந்த வேளையிலும் யோபு இழந்த வேளையிலும் ஆ ஆ மனம் நொந்து வல்ல தேவனை கைவிடவில்லை மகிழ்ந்து துதி செய்தான்
3. கிபியோன் மலை மேல் சூரியனை நில் என்றான் யோசுவா உமக்குள் இருந்ததினால் ஆ ஆ அந்த வல்லமை இந்த வேளை ஈயும் எங்களுக்கு வாழ்த்தும் இயேசைய்யா
4. விசுவாச உலகத்திலே உமக்குள் நின்றானே எலியா மழையை மாற்றினானே ஆ ஆ சத்துரு மத்தியில் ஜுவதேவனை வெளிப்படுத்தினான் மகிமை சூடினானே
5. விடிவெள்ளி தோன்றுமளவும் போராடினானே யாக்கோபு தேவதூதனிடம் ஆ ஆ தேவனோடும் மனிதனோடும் போராடி ஜெயித்தான் இஸ்ரவேலனானான்
6. கல்லெறிந்து இரத்தம் சிந்த கொன்ற போதிலும் ஸ்தேவான் கலங்கி துடிக்க வில்லை ஆ. ஆ.. என் பிதாவே இவர்க்கு மன்னியும் என்று பகர்ந்தானே உண்மை பக்தனே