வீர தீரமாய் நேரும் சீருமாய்
veera theeramaay nerum seerumaay
1. வீர தீரமாய் நேரும் சீருமாய் நின்று ஏகமாய்ப் போர் செய்வோம் பயமின்றியும் பின் வாங்காமலும் கீதம் பாடியும் முன் செல்லுவோம்.
சோம்பும் சோர்வும் நீக்கி வீரராக யாரும் வாரும்! யுத்தம் பண்ணுவோம் செல்லும்! வெல்லும்! ஆரவாரமாக யேசு நாதர் நம்பிப் போகிறோம்.
2. கொடி ஏற்றுவோம் காலம் ஊதுவோம் வாளும் வீசுவோம் போர்க்கோலமாய் கர்த்தர் தாங்குவார் கூடப்போகிறார் வெற்றி சிறப்பார் கெம்பீரமாய்.
3. சேனை கர்த்தரே! யேசு நாதரே! தேவரீரையே கொண்டாடுவோம் உம்மால் வல்லமை உம்மால் மகிமை உம்மால் வெற்றியைக் கண்டடைவோம்.