வேதத்தை தியானம் செய்
vedhathai thiyaanam sey
வேதத்தை தியானம் செய் சேதம் வராதை - என் மனமே
1. பொன்னிலும் மேலான பசும் பொன்னாம் விண்ணில் நம்மை சேர்க்குமாம்
2. தெளி தேனிலும் மதுர முள்ளதாய் களிப்புற செய்கிறாய்
3. இருபுறமும் கருக்கான பட்டயம் உருக்கிடும் கருவியாம்
4. கால்களுக்கேற்ற கர்த்தர் தீபம் பாதைக்கு வெளிச்சமாம்
5. குறைகளைக் காட்டும் மறையாம் கண்ணாடி மலையை உடைக்கும் சமட்டி
6. அழுக்கை கழுவும் அருள் தண்ணீராம் பானமே செய்திடலாம்
7. வானத்தை சேர்ந்த ஞான பாலம் பானமே செய்திடலாம்