வேதம் சத்திய வேதம்
vedham sathiya vedham
வேதம் சத்திய வேதம் - (2) மாசற்றது அது குற்றமற்றது என்றும் நிறைவானது (2) (வேதம்)
1.வசனங்கள் எல்லாம் தேவ ஆவியினாலே தேவ மனிதர் மூலம் எழுதப்பட்டதே- 2 (வேதம்)
2.வார்த்தைகள் எல்லாம் தேவ வார்த்தைகள் ஆகும் தவறாதது என்றும் அழிவில்லா வித்தாகும் 2
3. உபதேசிக்கும் வேதம் கடிந்து கொள்ளும் சீர்திருத்தும் வேதம் நீதியைப்படிக்கும் - 2
4. கால்களுக்கு நல்ல தீபமாகும் வேதம் பாதைக்கு நல்ல வெளிச்சமாகும் வேதம் - 2
5. சுத்தத் தண்ணீரை போல அது கழுவுகிறது சுத்தம் செய்து நம்மை பரிசுத்தமாக்குகிறது - 2
6. பக்தி விருத்தியடைய செய்கிறது சுதந்திரத்தை நமக்கு கொடுக்கிறது 2 (வேதம்)