வேத நூல் தாரும் விண் வெள்ளி
vedha nool thaarum vin velli
1. வேத நூல் தாரும் விண் வெள்ளி ஜொலிக்க திரிந்தலைவோர் திடப்படுவார்; அச்சுடரையோ புயல் மறைக்காது கெட்டோரை மீட்க யேசுவே வந்தார். வேத நூல் தாரும் தூது மொழி வீச வாக்குத்தத்தங்கள் கற்பனை அன்பும் இரவு சென்று விடிந்திடும் வரை உம் சுடர் என்னைச் சீராய் நடத்தும்.
2. வேத நூல் தாரும் என்னுள்ளம் நோகையில் வேதாளம் என்னை விரட்டுகையில் வார்த்தைகள் தாரும் யேசு மொழிந்திட்ட மீட்பர் என் பக்கம் என்றுக் காட்டிட. வேத நூல் தாரும் தூது மொழி வீச வாக்குத்தத்தங்கள் கற்பனை அன்பும் இரவு சென்று விடிந்திடும் வரை உம் சுடர் என்னைச் சீராய் நடத்தும்.
3. வேத நூல் தாரும் நடத்தும் என் நடை பாதாள மோசம் நான் அறியட்டும்; நிலையாய் நிற்கும் நித்ய தீபமாக நிர்மலன் பாதை நன்கு காட்டட்டும். வேத நூல் தாரும் தூது மொழி வீச வாக்குத்தத்தங்கள் கற்பனை அன்பும் இரவு சென்று விடிந்திடும் வரை உம் சுடர் என்னைச் சீராய் நடத்தும்.
4. வேத நூல் தாரும் சாவு வேளையிலும் விஸ்வாசம் கொள்ள அங்கலாய்ப்பின்றி; காலுக்குத் தீபம் பாதைக்கு வெளிச்சம் கர்த்தாவின் வீடு போய்ச் சேருமட்டும். வேத நூல் தாரும் தூது மொழி வீச வாக்குத்தத்தங்கள் கற்பனை அன்பும் இரவு சென்று விடிந்திடும் வரை உம் சுடர் என்னைச் சீராய் நடத்தும்.