வேடனின் கண்ணிக்கும்
vedanin kannikkum
வேடனின் கண்ணிக்கும் பாதுகாப்பார் பாழாக்கும் கொள்ளை நோய்க்கும் பாதுகாப்பார் அக்கினி சூளைக்கும் பாதுகாப்பார் கண்மணி போல் காத்திடுவார்
உன்னதமானவர் மறைவினிலே கெம்பீரமாக துதித்திடுவேன் சர்வ வல்லவர் கரமதிலே உள்ளம் கையில் வரையப்பட்டேன்-2
அவர் அடைக்கலம் என் கோட்டை நான் என்றும் நம்பிடும் தேவன்-2-உன்னதமானவர்
1.சிறகுகளில் என்னை மூடிக்கொள்வார் செட்டையின் கீழ் என்னை மறைத்துக்கொள்வார் வழிகளில் எல்லாம் என்னை காத்துக்கொள்ள தம் சேனையை அனுப்பிடுவார்-2-உன்னதமானவர்
2.இரவில் பயங்கரம் நெருங்காது பகலில் அம்புக்கும் பயம் ஏது சேனையின் கர்த்தர் என்னோடு எந்த தீங்கும் அணுகாது-2-உன்னதமானவர்