வழியான என் தேவனே
vazhiyaana en devanae
வழியான என் தேவனே துணையாக வருவார் என்றும் பெலனானவர் என் அரணானவர் என்றென்றும் எனை விட்டு விலகாதவர்
நிழல் கூட எனை பிரியும் நேரம் உண்டு நிலையான மலை கூட விலகுவதுண்டு அசையாது அவர் கிருபை என்றும் அழியாது அவர் மகிமை
அல்லேலூயா அல்லேலூயா பயம் எந்தன் வாழ்வில் இல்லை
கருவில் நான் உருவான நாள் முதலாய் கருத்தாக எனை காக்கும் கர்த்தரிவர் இருள் என்னை சூழ்ந்தபோதும் ஒளியான துணையானவர்
முள்ளான பாதை நான் செல்லும்போதும் கல்வாரி அனுபவம்தான் காணும்போதும் என் நேசர் உடன் இருப்பார் என் பாரம் அவர் சுமப்பார்