வழிகாட்டும் உந்தன் வெளிச்சம்
vazhigaattum undhan veliccham
வழிகாட்டும் உந்தன் வெளிச்சம் உன்னத ராஜ தீபம் வாழ்க்கையின் பயணம் நடத்தும் உன்னதர் இயேசு வசனம்
பரலோக பாக்யம் அளிக்கும் பாசத்தால் உன்னை நடத்தும் இருள் சூழ்ந்த வாழ்வை மாற்றும் இன்பராம் இயேசு வசனம்
துக்கங்கள் தயக்கம் மாற்றும் தீமைகள் எதிர்த்து ஜெயிக்கும் பக்தர்கள் கூட்டம் சேர்க்கும் பரமன் இயேசு வசனம்
நித்தியத்தில் உன்னை சேர்க்கும் நீதியின் பாதை நடத்தும் சத்தியமாம் ஜீவன் அளிக்கும் சாந்தனாம் இயேசு வசனம்