வழி தெரியா ஆட்டை போல விலகினேன்
vazhi theriyaa aattai pola vilaginen
வழி தெரியா ஆட்டை போல விலகினேன் மேசியாவே அழைத் தென்னை சேர்த்துக் கொண்டீர் உன்னதரே ஸ்தோத்திரம்
வழி தெரியா ஆட்டை போல விலகினேன் வேதனையால் அழைத்தீரே இயேசு நாதா அன்பாலே ஆதரித்தீர்
தூர கிடந்த என்னை தேடி வந்தீரே நாதா வேறொரு மார்க்கம் இல்லை உம் கிருபை உன்னதமே
சிற்றின்ப சேற்றினிலே சிதறிய வாழ்க்கையிலே சீர் கெட்டு அழியாமலே சேர்த்தீரே மந்தையிலே
இருளான உலகத்திலே ஏய்த்திடும் பேய்கள் வெல்ல ஜெயம் தந்து நடத்திடுவீர் ஜீவனில் என் இயேசுவே