வழி நடத்தும் வல்ல தேவன்
vazhi nadathum valla devan
வழி நடத்தும் வல்ல தேவன் வாழ்வில் நாயகனே வாழ்வில் நாயகனே நம் தாழ்வில் நாயகனே
பரதேசப் பிரயாணிகளே நாம் வாழும் பாரினிலே – பரமானந்தத்தோடே செல்வோம் – பரமன் நாட்டிற்கே இயேசு பரன் தம் வீட்டினிற்கே
போகும் வழியைக் காட்டி நல்ல போதனை செய்வார் – ஏகும் சுத்தர் மீது கண்கள் இருத்தி நடத்துவார் இயேசு திருத்தி நடத்துவார்
அந்தகார சக்திகள் எம்மை அணுகிடாமலே – சொந்தமான தம் ஜனத்தை சூழ்ந்து காப்பாரே இயேசு துணையாய் நிற்பாரே
வாதை நோய்கள் வன்துன்பங்கள் வருத்திய போதும் – பாதையில் நாம் சோர்ந்திடாமல் பலப்படுத்திடுவார் இயேசு திடப்படுத்திடுவார்
காடானாலும் மேடானாலும் கடந்து சென்றிடுவோம் – பாடானாலும் பாடிச் செல்வோம் பரவசமுடனே இயேசு பரன் தான் நம்முடனே
அன்றன்றுள்ள தேவை தந்து ஆதரிப்பாரே – என்றென்றும் துதிகனமும் மகிமையவர்க்கே இயேசு மகிபனாமவர்க்கே