வழி நடத்த வரும்
vazhi nadatha varum
வழி நடத்த வாரும்-இயேசுவே வழி நடத்த வாரும் வழி நடத்த வாரும்-மேய்ப்பரே வழி நடத்த வாரும்
பழியைச் சுமந்து நாங்கள்-பாவக் கடலில் மூழ்கினோமே எமது படகைச் செலுத்தி-அன்புக் கரையில் சேர்க்க வாரும்
ஐம்புல ஆசைகளால்-தினமும் அடிமையாகிப் போனோம் எங்களின் நாயகனே-சத்திய வழியைக் காட்டித் தாரும்
சுதந்திர புருஷர்களாய் உமக்குச்-சொந்த ஜனங்களாக வேண்டும் உமது சுகந்தரும் வார்த்தையினால்-நாங்களும் சுகத்தை அடைய வேண்டும்