வழி எல்லாம் துணையாக
vazhi ellaam thunaiyaaga
வழி எல்லாம் துணையாக வந்த தெய்வமே விழி இமைக்காமல் இரவெல்லாம் காத்த தெய்வமே-2 உம் புகழ் பாட வந்தோம் புகலிடம் நீர்தானையா உம்மையே போற்ற வந்தோம் புதுவாழ்வு தந்தீரய்யா-2
பல்லவி
ஆராதனை ஆராதனை அப்பாவுக்கே தேடி வந்த அப்பாவுக்கே ஆராதனை ஆராதனை தகப்பனுக்கே தாங்கி வந்த தகப்பனுக்கே-வழி
1.வறட்சியே எங்கள் வாழ்வானதே முயற்சியும் அதிலே வீணானதே-2 வறண்ட பூமியிலும் நதியோட செய்தவரே நீரே எங்கள் யெகோவாயீரே-2 நீரே எங்கள் யெகோவாயீரே
பல்லவி
ஆராதனை ஆராதனை அப்பாவுக்கே தேடி வந்த அப்பாவுக்கே ஆராதனை ஆராதனை தகப்பனுக்கே தாங்கி வந்த தகப்பனுக்கே-வழி
2.கண்ணீரே எங்கள் உணவானதே களிப்பை மறந்து நாளானதே-2 காய்ந்த மரங்களையும் கனிதர செய்தவரே நீரே எங்கள் யெகோவாயீரே-2 நீரே எங்கள் யெகோவாயீரே
பல்லவி
ஆராதனை ஆராதனை அப்பாவுக்கே தேடி வந்த அப்பாவுக்கே ஆராதனை ஆராதனை தகப்பனுக்கே தாங்கி வந்த தகப்பனுக்கே-வழி