வருவீர் உள்ளம் தருவீர்
varuveer ullam tharuveer
வருவீர்! உள்ளம் தருவீர்! தேவ குமரன் பாதம் பணிவார்! பார் தனில் பரிவுடனே பரம்பொருள் உதித்தார் தயவென்னவோ!
1. மலைமீதிலே அலையும் ஆடுகளைப்போல் நிலையில்லா உலகினிலே அலை வோரை விலையேறும் உதிரமே சிலுவையில் சொரிந்தே விலையேறும் சுதராக்க மனுவாயினார் இதோ - வருவீர்
2. மருதோன்றி மலராம் இயேசு இவரே மருவில் நாடி வந்த மேசியா இவரே திருசித்தம் புரியவே சுரலோகம் துறந்தார் வருவேன் தருவேனே நமைமுற்றும் இவர்க்கே - வருவீர்
3. சமாதானப் பிரபுவே நேசர் இயேசுவே மனைவி வந்த நல்ல சமாரியனே தானமாக கிருபையை ஈனராம் நமக்கே கனிவாக தரவே ஆகுடிலிடை பிறந்தார் - வருவீர்
4. இடையவர் ஞானியார் அடிபணிந்த இடையில்லா ஜெயம் நல்கும் திருவடிகள் இடையான நாமத்தில் ஜெயித்தாரே ஜெகத்தில் இடையின்றி உயர்த்துவோம் உள்ளமெல்லாம் உவந்தே - வருவீர்
5. தாவீதின் வங்கிஷத்துத் தாரகை இவர் தாவீது கோத்திரத்தின் சிங்கமும் இவர் தாவீதின் திறவுகோல் தோள் மீது ஏற்றவர் தாவீதின் செங்கோல் ஆட்சியும் இவர்க்கே - வருவீர்