வருவீர் பெத்தலைக்கே
varuveer pethalaikke
1. வருவீர் பெத்தலைக்கே வாழ்த்திட கனிந்துள்ள தருவீர் துதிகள் பாக்களுடனே பாரீர் இத்தேவசேயர் நரர்க்காய் கொண்ட அன்பை பாரெங்கும் சொல்லி புகழ் சாற்றிடுவோம்
ஓசன்னா உன்னதங்கள் பாட மேசியா மனுவாயினார் அற்புத தானமே இயேசுவே நமக்கு தற்பரன் தயவென்னவோ
2, காணாதலைந்த எம்மை பாலையில் கண்டெடுத்த காருண்ய வாரியிதோ முன்னணையிலே காயந்தனிலே தேவ தூய சித்தமே செய்ய காயங்களடைந்திட ஏகினாரே
3. மரணவிருளதில் மாய்ந்திடும் மாந்தர் தனைய மருவி மீட்கக் கொண்ட கோலமிதுவோ மேருவாய் நின்ற சாப ரோகங்கள் தீர இவர் ஆருமற்றவரான கோமகன்
4. கன்மலையான இவர் கன்னியில் பிறந்தவர் கன்மங்கள் போக்க வந்த ஜீவ ஒளி கன்னியாய் சபைதனை தம்முன்னில் நிறுத்துவோர் இன் மனமுடைய நல் அயனிவர்
5. பாதையும் சத்தியமும் ஜீவனும் இவரல்லோ யாவையும் வார்த்தையினால் வகுத்தவர் பார்மிசையதிலவர் இயேசென்னும் பெயர்தனில் பார் மகிழ்ந்திட பாலனாய் பிறந்தார்