வருவீர் நீர் வருவீர்
varuveer neer varuveer
வருவீர், நீர் வருவீர் - தோழரே காலமில்லை உமக்கு - இன்று வருவீர்
1. துன்பமே உலகிலே ஓ! வா, நீ மாள்வானேன் உன்னையே ஆ! உன்னையே அழைக்கிறார் உன் ஆண்டவரே - வருவீர்
2. தீயிலே ஈ பூமியே ஆ, ஆ, ஆ! தேய்ந்து போகுமே நம்பாதே, ஓ! நம்பாதே நாடாயோ உன் ஆண்டவரை - வருவீர்
3. புல்லாமே பூலோகத்தார் ஓ, ஓ, ஓ! வாடிப் போவாரே பார்த்திடாயோ, பார்த்திடாய் பாதை காட்டும் ஆண்டவரே - வருவீர்
4. நியாயவிதி செய்யும் நாள் ஓ! பார், உன் அண்டை நிற்குதே நினைப்பாய், ஓ! நினைப்பாய் நின் கதி ஆ! என்னவாகுமோ - வருவீர்
5. வருவாரே வேகத்தில் ஆ, ஆ! தம் தாசருக்காய் வந்திடாயோ! வந்திடுவாய் தாசன் நீயும் ஆகிடுவாய் - வருவீர்