வருவீர் மனம் மகிழ
varuveer manam magizha
வருவீர் மனம் மகிழ - அரசே வருவீர் விரைவாய் ஆசிகள் தருவீர் - 2 வருவீர்
அருள்மாரி அளித்திடவே - ஆ! ஆ! ஆ அருள் காரிருள் அகற்றிடவே பாரில் பாவிகள் பரனடிபணிய
இயேசுவின் நாமமதை ஆ! ஆ! ஆ! - இயேசு நேசர்கள் உயர்த்திடவே பேசுமடியார் பெலனடைந்திடவே
உன்னத பெலனீய - ஆ ஆ! ஆ! - உன்னத வன்மையுடன் நடக்க கன்மலையும்மைப் பின்தொடர
ஆதி சபையது போல் ஆ! ஆ! ஆ! - ஆதி ஆவியின் வரங்களினால் அலங்கரித் தெம்மை ஆட்கொண்டருள
தூயனுமைத் துதிக்க - ஆ! ஆ! ஆ! - தூயனுமை தூய்மை அகம்தரிக்க காயம் முழுவதும் உமக்கே படைக்க
ஆயத்தமாகிடவே ஆ! ஆ! ஆ! - ஆயத்த நாயகன் வருகையிலே மாயமான யாவையுமகற்ற