வருவாய் கர்த்தரின் பாதம்
varuvaay kartharin paadham
வருவாய் கர்த்தரின் பாதம் மன ஆறுதல் தேடி ஏசுவை தேடி மீட்படைவாய் உன் ஆத்துமாவில் தருணமிதே நீயோ தள்ளிடாதே
1. உள்ளம் திறந்தே வேண்டிடுவாய் உன் கவலை தீரும் விரைவாய் இரவும் பகலும் நீ ஜெபம் செய் இதயத்தின் காரிருள் நீக்கிவிடுவார்
2. மாறாத அன்புள்ள ஆண்டவரே மாந்தர் வினை சுமந்தவரே கொடுமை குருசில் மாண்ட வரே கனிந்துன்னைக் கண்டு அழைக்கின்றாரே
3. தீராத நோய் பிணி தீர்த்திடுவார் தம் தழும்பால் சுகம் தருவார் கருணை மிகுந்த கர்த்தரிவர் குறைகளை தீர்த்துன்னை மன்னிப்பாரே
4. கோரப் புயலுடன் காற்றடித்துப் கைவிடாரே துணை அவரே கர்த்தரே கப்பலின் மாலுமியாய் கவிழ்ந்து விடாதுன்னைக் காத்திடுவார்
5. நாள்தோறும் துன்பம் நீ சகிப்பதினால் நல் பொறுமை நீ கண்டடைவாய் நலமாய் நடத்தும் இயேசுவிடம் நிதம் உன் சமாதானம் வேண்டிடுவாய்