வருஷத்தின் துவக்க முதல்
varushathin thuvakka mudhal
வருஷத்தின் துவக்க முதல் வருஷத்தின் முடிவு மட்டும் - 2 கர்த்தரின் கண்கள் உனை நோக்குதே - 2 வல்லமையை உன்னில் விளங்க செய்வாரே (தம்) -2
இஸ்ரவேல் இழந்த கானானின் வாழ்வை திரும்ப பெறும்படி உதவி செய்தாதே - 2 கர்த்தரின் வல்லமை உன் வாழ்விலே - 2 இழந்த சுகவாழ்வை தந்திடுமே ( நீ ) - 2 இழந்ததை பெற்றிடுவாய் நீ வளமோடு வாழ்ந்திடுவாய் நீ - 2
தாவீது இழந்த மீட்பின் சந்தோஷம் திரும்ப பெறும்படி உதவி செய்தாரே - 2 கர்த்தரின் கிருபை உன் வாழ்விலே - 2 இரட்சிப்பின் சந்தோஷத்தையே தந்திடுமே -2 இழந்ததை பெற்றிடுவாய் நீ வளமோடு வாழ்ந்திடுவாய் நீ - 2
சிம்சோன் இழந்த அபிஷேகத்தையே திரும்ப பெறும்படி உதவி செய்தாரே - 2 கர்த்தரின் இரக்கம் உன் வாழ்விலே - 2 இழந்த அபிஷேகத்தை தந்திடுமே ( நீ ) -2 இழந்ததை பெற்றிடுவாய் நீ வளமோடு வாழ்ந்திடுவாய் நீ - 2