வருஷத்தை உமது நன்மையால்
varushathai umadhu nanmaiyaal
வருஷத்தை உமது நன்மையால் முடிசூட்டுகிறீர் உமது பாதைகள் நெய்யாய்ப் பொழிகிறது - 2 நீதிமான்களே கர்த்தருக்குள் களிகூருங்கள் -2 துதி செலுத்துவது செம்மையானவர்களுக்கு தகும் -2
சுர மண்டலத்தினால் வீணையால் கர்த்தரை துதித்து பாடிடுவோம் ஆனந்த கீதங்கள் வாத்தியமும் முழங்க அவருக்கே புதுப்பாட்டை பாடிடுவோம்
கர்த்தரின் வார்த்தை உத்தமமும் அவன் செய்கையெல்லாம் சத்தியமாய் அவர் ஆலோசனை நித்திய காலமும் தலைமுறை தலைமுறையாக நிற்கும்
கர்த்தர் நமக்கு அடைக்கலமும் நாம் நம்பியிருக்கும் கன்மலையும் நீரோ மாறதவர் உமது ஆண்டுகள் முடிந்து போகாமல் நிலைத்து நிற்கும்