வருஷத்தை நன்மையால் முடி சூட்டினீர்
varushathai nanmaiyaal mudi soottineer
வருஷத்தை நன்மையால் முடி சூட்டினீர் எங்கள் தெய்வம் நீரே உம் வல்லமையால் எங்களையும் நடத்தி செல்லும் எங்கள் யெகோவாயீரே-2
உம்மையன்றி எங்களுக்கு சகாயர் யாருமில்லை-2 உம்மையே நம்பிடுவோம் வெட்கப்பட்டுப்போவதில்லை-2 -வருஷத்தை
1.இஸ்ரவேலரோடு முன்பாக சென்றீர் இடைவிடாமலே பாதுகாத்தீர் இயேசுவின் நாமம் எங்களுக்குள் உண்டு இருதி வரைக்கும் நடத்திடுவீர்-2
2.பகைவரை வென்று களிகூர செய்தீர் எல்லையை பெரிதாக்கி மகிழ செய்தீர் வார்த்தையை கொண்டு எதிரியை வென்று உமது சபையை பெருக செய்வீர்-2
3.தாவீதின் வம்சம் துளிர்த்ததை போல எங்களின் குடும்பங்கள் செழிக்க செய்வீர் ஆவியில் நிறைந்து கனிகளை கொடுத்து உமது ஊழியம் செய்ய வைப்பீர்-2