வருந்தி பாரம் சுமந்தாயே
varundhi paaram sumandhaayae
வருந்தி பாரம் சுமந்தாயே திரும்பி என்னிடம் ஓடிவந்தால் விரும்பும் மெய் சமாதானம் தந்து அரும் பிரியத்தோடு ஏற்றுக் கொள்வேன் வருந்தி பாரம் சுமந்தாயே மானிடனே
இருண்டு போன வாழ்வுடனோ மருண்டு போன மனதுடனோ இருந்தால் உன்னையே மாற்றிக் கொண்டு வருவாய் என்பின்னே ஏற்றுக் கொண்டு
பாவ வாழ்வின் கோரத்தினால் அவனை இழந்த பாரத்தினால் மேவிடும் துயரை நீக்கிக் கொள்ள தேவனின் சாயலாய் ஆக்கிக் கொள்ள