வருந்தி அழைக்கும்
varundhi azhaikkum
வருந்தி அழைக்கும் தொனி கேட்டு வந்திடுவாய் நல் இயேசுவண்டை உன்னையும் தம்மை போல மாறிடவே தந்தாரே ஜீவன் சிலுவையிலே
1. பாவத்தில் உழலும் நண்பனே நீ மாயையை விட்டு விலகி வர மா தோஷம் நீக்கிய மகிமை பெற நேயன் அருகில் வந்திடாயோ - வரு
2. புண்ணியம் புகலிடம் வேறில்லை பூவில் நீ வீணாய் அலைவதேனோ மரணத்தை வென்று மே உயிர்த்தெழுந்த மா வல்ல இயேசுவே அழைக்கிறாரே - வரு
3. நண்பர்கள் உன்னை தள்ளிடுவான் நேசித்தவர்கள் கைவிடுவார் இயேசுவே என்றுமே மாறிடாரே ரசித்திட அவரை அழைக்கிறாரே- வரு
4. பிறவாதார் ஜலத்தினாலும் ஆவியினாலும் பரலோகம் செல்ல வே ஆவதில்லை புது எருசலேம் நல் நகர மதில் புத்திரராய் வர அழைக்கிறாரே - வரு
5.விண்ணிலே என்றும் இயேசு வுடன் தேவ மைந்தனாய் நீ ஜீவிக்க விசுவாசம் நம்பிக்கை அன்பிவையில் நிலைத்து வளரவே கிருபை செய்வார் - வரு