வரும் பரிசுத்தாவி
varum parisuthaavi
வரும் - பரிசுத்தாவி - தணலாய் தாவி தாரும் ஓர் மாரி
1. காத்திருந்த தாசர் மீதில் - கர்த்தர் நீர் இறங்கினார் இந்த வேளை வந்திறங்கி - உந்தன் அருளைப் பொழிகுவீர்
2. மாரியின்றி மாளுகின்றோம் - மகிபனே கண் பாருமே காலங்களும் கடந்திடுதே - நெருங்குதே உம் வருகையும்
3. அக்கினி நா வும் வல்ல வாக்கும் - உன்னத பெலன் நல்குவீர் ஆவி ஆத்மா சரீரம் முற்றும் தூய்மையாகத் துலங்கவே
4, அன்புடன் அழைக்கிறோம் - வந்திடுவீர் வல்லமையாய் அன்பு - அதை அன்பினாலே உள்ளம் நிரம்ப - அடியாரை அபிஷேகிப்பீர்
5. மீட்புறும் அந்நாளி லன்றோ - மன்னன் இயேசு சாயலாய் மறு ரூபத்தின் ஆவியிலே - மாறுவோம் மறுரூபம்