வருகிறாரே வானபரன்
varugiraarae vaanabaran
வருகிறாரே வானபரன் வானம் விட்டெமையழைக்க வருகிறதைப் பாரும் வானோர்களும் ஆர்ப்பரிக்க அன்பருமதிசயிக்க வருகிறதைப் பாரும்
ஆனந்தமே! ஆனந்தமே! ஆர்ப்பரிப்போம் ஆனந்தமே
1. தூதர் பல கூட்டரும் தூய சங்கம் சூழ்ந்தவராய் வருகிறது பாரும் தூய ஆடைதான் தரித்து தூய்மையின் சாயலணிந்து வருகிறதைப் பாரும் துதித்திடுவோம், துதித்திடுவோம், உன்னதனைத் துதித்திடுவோம்
2. எக்காள மது தொனிக்க அக்களிப்புடையராய் வருகிறதைப் பாரும் மக்களுக்கு தாமருளும் பரிசுகளுடையராய் வருகிறது பாரும் அல்லேலூயா! அல்லேலூயா! அன்பருக்கே அல்லேலூயா
3. மாநிலத்தில் பரிதவிக்கும் பாவமற்ற மைந்தருக்காய் வருகிறது பாரும் மலினமற்று மாண்டவரை மண்ணில் விடாதரவணைக்க வருகிறதைப் பாரும் மகிமை இது, மகிமை இது, மகிமை காணும் மகிமை இது
4. கருணையின் காலம் முடிந்து கிருபையின் வாசலடைக்க வருகிறது பாரும் வாருமென் றெமையழைத்து தருணமில்லையென்றுரைக்க வருகிறதைப் பாரும் ஆனந்தமே! ஆனந்தமே! அன்புடையோர்க்கானந்தமே
5. கல்வாரி மலைதனிலே காயங்களடைந்தவர் தாம் வருகிறதைப் பாரும் காதலெம்மில் வைத்ததினால் கஸ்திகள் சகித்தவர் தாம் வருகிறதைப் பாரும் அளித்திடுவோம், அளித்திடுவோம், கண்டவரைக் அளித்திடுவோம்