வருகின்றார் இயேசு சீக்கிரமாய்
varugindraar yesu seekkiramaay
வருகின்றார் இயேசு சீக்கிரமாய் மேகங்கள் மீதினில் வந்திடுவார்
நினையாத நேரத்திலே நடுவானில் தோன்றிடுவார்
1. கர்த்தரின் நாள் சமீபம் ஆயத்தமாகிவிடுவோம் ஆயிரம் ஆயிரமாய் தூதரோடு வந்திடுவார்
2. கற்புள்ள கன்னிகையாய் தீபத்தில் எண்ணெயுடன் விருந்து சாலைக்குள்ளே மணவாளனோடேசெல்வோம்
3.எக்காளம் தொனிக்கையில் மரித்த பரிசுத்தர்கள் எழும்பிட நாமும் மறுரூப மாகிடுவோம்
4. இன்று இயேசு இரட்சகர் நாளை நியாயாதிபதி நீதியாய் நியாயந்தீர்க்க ராஜாதி ராஜன் வாரார்