வருகை காண விழிகள்
varugai kaana vizhigal
வருகை காண விழிகள் இரண்டும் ஏங்குதே இரட்சகர் முகத்தை பார்க்க மனமும் ஏங்குதே எப்போது வருவீர் என்று நான் ஏங்கி தவித்து இருந்தேன் சீக்கிரம் வருவீர் என்று அறிவேன்
யுத்தங்கள் செய்தியை கேட்கிறேன் பஞ்சங்கள் செய்தியை கேட்கிறேன் பூமி அதிர்வுகள் உணர்கிறேன் வாதை நோய்களை காண்கிறேன்
அன்பு தனிவதை காண்கிறேன் விசுவாசம் குறைவதை காண்கிறேன் எப்போது வருவீர் என்று நான் ஏங்கி தவித்து இருந்தேன் சீக்கிரம் வருவீர் என்று அறிவேன்
தற்பிரியரையும் காண்கிறேன் பணபிரியரையும் காண்கிறேன் அறிவின் பெருக்கத்தை பார்க்கிறேன் அழிவின் நெருக்கத்தை பார்க்கிறேன்
கட்டளை மீறல் பார்க்கிறேன் வேதம் நிறைவேறல் பார்க்கிறேன் எப்போது வருவீர் என்று நான் ஏங்கி தவித்து இருந்தேன் சீக்கிரம் வருவீர் என்று அறிவேன்